சித்தார்த்தின் ‘3 பிஎச்கே ‘ படப்பிடிப்பு நிறைவடைந்தது!

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரிப்பில், ‘8 தோட்டாக்கள்’  ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த்,சரத்குமார், தேவயாணி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், மற்றும் சைத்ரா ஆகியோரும் நடித்து வரும், ‘3 பிஎச்கே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ள படக்குழு , இறுதி நாளில்  கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஃபீல் குட் திரைப்படமாக உருவாகி இருக்கும் இப் படம் குறித்து  அருண் விஸ்வா கூறியுள்ளதாவது,  “மனதை வருடும் இதமான, திருப்தியான கதைகளைத் தயாரிப்பது தயாரிப்பாளராக எனக்கு மகிழ்ச்சியான விஷயம். அந்த அனுபவத்தை கொடுத்த ‘3 பிஎச்கே’ படத்திற்கும், படக்குழுவினருக்கும் நன்றி. நாங்கள் திட்டமிட்டபடியே சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் உலகளவில் படத்தின் திரையரங்க வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அறிவிப்போம். இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்களை மகிழ்விக்கும்” என்கிறார்.இப்படத்தின் ஒளிப்பதிவை  தினேஷ் கிருஷ்ணன் பி & ஜித்தின் ஸ்டானிஸ்லாஸ்,கவனிக்க, அம்ரித் ராம்நாத்  இசையமைத்துள்ளார் .