ரஜினிகாந்த் நடிப்பில்,நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்,கடந்த 2023ஆம் ஆண்டு ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் 2ம் பாகம் உருவாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் ‘ஜெயிலர் 2’ படத்தின் அறிமுக வீடியோ வெளியானது. தற்போது நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ள நிலையில், ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு மார்ச் 10-ல் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், அதனை தொடர்ந்து தேனி, கோவா மற்றும் சில பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.முதல் பாகத்தில் நடித்த கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் மலையாள நடிகர் மோகன்லால் இருவரும் இரண்டாம் பாகத்திலும் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பில் ரஜினிகாந்த் சம்பந்தபட்ட காட்சிகளை படமாக்க இயக்குநர் நெல்சன் திலீப்குமார் திட்டமிட்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.