மலையாள திரையுலகில் ஜூட் அந்தோணி ஜோசப் இயக்கத்தில், கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’2018’. வெறும் ரூ.26 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் பல கோடிகளை வாரிக்குவித்ததோடு, 96வது ஆஸ்கார் விருது நிகழ்வில் சிறந்த சர்வதேச படத்திற்காகவும் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து முன்னணி நடிகர்கள் பலரும் அந்தோணி ஜோசப் ஜூட் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில், இயக்குனர் ஜூட் அந்தோணி ஜோசப் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.