தமிழ் சினிமாவின் அடையாளமாக கருதப்படும் இசைஞானி இளையராஜா,கடந்த 8ஆம் தேதி லண்டனின் சிம்பொனியை அரங்கேற்றம் செய்ததன் மூலம் தற்போது இந்திய இசையின் அடையாளமாக மாறியுள்ளார் இளையராஜா கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவில் இசையமைப்பாளராக உள்ளார். இவர் இதுவரை 1500க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்து கொடுத்துள்ளார். . இந்நிலையில் 82 வயதை எட்டிய இளையராஜா கடந்த ஆண்டே தான் ஒரு சிம்பொனியை உருவாக்கியுள்ளதாகவும், அதுவும் ஒரு மாதத்தில் எழுதி முடித்து உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். மேலும் கடந்த 8ஆம் தேதி டான் உருவாக்கிய சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றம் செய்து முடித்தார்.தமிழ்நாட்டில் இருந்து பெரும் படையே புறப்பட்டுச் சென்றது. இளையராஜா லண்டன் செல்வதற்கு முன்னர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். சிம்பொனியை முடித்துவிட்டு வந்த இளையராஜா, தனக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சென்று நன்றி தெரிவித்தார் . அப்போது லண்டனில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து தனது சிம்பொனி குறித்து ஆர்வமாக பேசினார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ” இலண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்து திரும்பியுள்ள இசைஞானி இளையராஜா, அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார். அவரது அரை நூற்றாண்டு காலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்! ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்!” என பதிவிட்டுள்ளார். இது இசைஞானி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. மேலும் இந்த அரசு விழா இசைஞானியின் பிறந்த நாளான ஜூன் 2ஆம் தேதி நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது.