மணிரத்னத்தின் இயக்கத்தில், கமல் ஹாசனுடன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள ‘தக் லைஃப்’ வரும் ஜூன் மாதம் வெளியாகிறது. இது சிம்புவின் 48வது படமாக அமைந்துள்ளது இப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 வது படமாக உருவாக்கவுள்ள எஸ்டிஆர் 49 வது படத்தை ‘பார்க்கிங்’ படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.கல்லூரியிண் பின்னணியில் இன்றைய தலைமுறை கொண்டாடும் வகையில், விண்டேஜ் எஸ்.டி.ஆரின் அனைத்து மேனரிசங்களுடன், இளமை துள்ளும் கலக்கலான கமர்ஷியல் படமாகவும், முழுக்க முழுக்க சிம்புவின் ரசிகர்களுக்கான படமாகவும் உருவாகிறது.இப்படத்தில் சிம்புவின் நண்பரான நடிகர் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க, கயாடு லோஹர், மிருணாள் தாக்கூர் ஆகியோருடன் இயக்குனர் பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில் தற்போது இப்படத்தில் சிம்புவின் ஜோடியாக செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதில் சந்தானத்தின் ஜோடியாகவும் பிரபல நடிகைதேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படம் கல்லூரி பின்னணியில் நடக்கும் கதை என்பதாலும், பிரபல தனியார் கல்லூரி ஒன்றிலேயே பெரும்பகுதி படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் 2ம் வாரத்தில் நடத்தப்பட்ட உள்ளதாம்.