ரன்யா ராவிற்கு துபாயில் சொந்தமாக நகைக்கடை! சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு?

சமீபத்தில் பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து பெங்களூருவுக்கு தங்கம் கடத்தியதாக அதிரடியாக கைது செய்யப்பட்டார்.அவரிடம் போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்ற்றனர். இந்த விசாரணையில், அவர் துபாயில் கன்னட நடிகர் தருணுடன் இணைந்து “விரா டைமண்ட்ஸ்” என்ற பெயரில் தங்கநகை கடை ஒன்றையும் நடத்தி வருவதாகவும், அந்த கடையில் இருந்து தங்கத்தை இந்தியாவுக்கு பலமுறை கடத்தி வந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. அந்த நகைக்கடையில் வெளிநாட்டில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு, அங்கேயே விற்பதாக கணக்கு காட்டப்பட்டுள்ளதாகவும்,ஆனால்,அந்த கடையில் இருந்து பலமுறை இந்தியாவுக்கு தங்கத்தை கடத்தி வந்திருப்பதாகவும், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 27 முறைக்கு மேல் தங்கத்தை கடத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இவர்களின் வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டதில், பல கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சர்வதேச தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.