மண்ணையும் மானத்தையும் காக்க வீரம் ஈரம் அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இப்படைப்பின் நெருப்பு தகிக்கும் ஐந்தாவது பாடலை கவிப்பேரரசு வைரமுத்து.,இயக்குநர் வ.கௌதமனிடம் தந்ததோடு அப்பாடலைப் பற்றி ஆகப் பெரும் நெகிழ்வோடு தனது எக்ஸ் தளப் பதிவில் பதிவிட்டுள்ளார்.
கௌதமன் இயக்கும்
புரட்சிப் படம்
படையாண்ட மாவீரா
அனைத்துப் பாடல்களையும்
எழுதியிருக்கிறேன்
ஒவ்வொரு பாடலையும்
வந்து வாங்கிச் செல்வார்;
வாசித்து வழங்கச் சொல்வார்
இந்தப் பாடலை
வாசிக்கும் பொழுது
குளமான கண்களோடு
கும்பிட்டுக்கொண்டே எழுந்தார்
அவர் கைகளில்
பாட்டுத்தாளை ஒப்படைத்தேன்
நல்ல ரசிகனுக்கு
நல்ல பாடல் அமையும்
இசை: ஜி.வி.பிரகாஷ்
பல்லவி:
“மாவீரா மாவீரா
வாவா வீரா மாவீரா!
நதியில் குளித்தது போதும்
இனிமேல்
குருதியில் குளித்து வா வா
பொடிநடை போட்டது போதும்
இனிமேல்
புலிநடை போட்டு வா வா
ஆதித் தமிழின்
அடையாளமே வா
ஆதிக்கம் அழிக்கும்
படையாழமே வா
ஆதவனை உன்
இடுப்பில் கட்டு
ஆயிரம் யானையைக்
கால்களில் கட்டு
காக்கும் கடவுள் அம்சம் நீதான்
வன்னிக் காட்டின் வம்சம் நீதான்
ஆயிரம் கோயில் ஆராதிக்கும்
அய்யனாருமே நீயேதான்
எரிமலை பொடிபட
எதிரிகள் அடிபட
கோழைகள் வழிவிட
ஏழைகள் வழிபட
எழுந்த மாவீரன் நீயேதான்
சரணம்:
உயிரைப் பிரிவது
மட்டுமா சாவு?
ஊரைப் பிரிவதும்
சாவுதானடா!
மண்ணகம் எல்லாம்
மண்ணகம் அல்ல
மானம் வீரம் வாழ்வுதானடா
தமிழன் யார்க்கும் சோறு கொடுப்பான்
மண்ணைத் தொட்டால்
திருப்பி அடிப்பான்
வீரத் தமிழன் மானத் தமிழன்
மூன்று இடத்தில் திருப்பி அடித்தான்
ஒருகாடு எங்கள் சந்தனக்காடு
மறுகாடு இந்த முந்திரிக்காடு
எல்லாவற்றிலும் மேலாய் இருப்பது எங்கள் எங்கள் வன்னிக்காடு
மாவீரா மாவீரா
வா வா வீரா மாவீரா!அதில்,