ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’. இப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தை கன்னட திரையுலகின் பிரபல இயக்குனர் பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார். கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் மொத்தம் 54 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டு, டப்பிங் மற்றும் இதர போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்திற்காக நரேன் பாலகுமார் இசையில் ஜி வி பிரகாஷ் குமார் பாடிய, ‘ஷோக்கா நிக்கிறியே’ முதல் சிங்கிளின் டீஸர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் சிங்கிள்’ ‘பிரியாணி’ பாடல் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தற்போது வெளியாகியுள்ளது. இந்த சுடச்சுட பிரியாணி பாடலை இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி பாடியுள்ளனர். இப்பாடலின் வரிகளை ஹைட் எழுதி இருப்பதோடு வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி உடன் இணைந்து பாடியுள்ளார். பிரியாணி பாடல் காட்சியில்,உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு பெற்றுள்ளனர் .வரும் கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் இரண்டு பாடல்கள் உள்ளிட்ட படத்தின் முழு ஆல்பம் முன்னணி ஆடியோ நிறுவனத்தால் விரைவில் வெளியிடப்படும் என்கிறது படக்குழு..