தமிழ்த்திரையுலகில் தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தின் மூலம்தயாரிப்பாளராக அறிமுகமானவர் பைவ் ஸ் டார் கதிரேசன். தொடர்ந்து தனுஷ் நடித்த ஆடுகளம், நையாண்டி போன்ற படங்களையும் தயாரித்துள்ள இவர்,தற்போது, நடிகர் தனுஷ் தன்னிடம் முன்பணம் வாங்கிவிட்டு கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடிப்பதாக அவர் புகார் அளித்தும் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை தனுசுக்கு ஆதரவாக பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி படுவதாகவும்,மேலும் அரசியல் பின் புலத்தை காட்டி மிரட்டுவதாகவும் கதிரேசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது,
“திரு.R.K.செல்வமணி அவர்களுக்கு,
6.9.24அன்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் Five star creations பங்குதாரர் என்ற முறையில் நான் கலந்து கொண்டு திரு.தனுஷ் அவர்கள் எங்களிடம் ஆறு வருடங்களுக்கு முன்,முன்பணம் பெற்றுக்கொண்டு இன்று வரை கால்ஷீட் தரவில்லை
என்றும் அதனால் நாங்கள் அனுபவிக்கும் மனவேதனைகளையும் பதிவுசெய்தேன்.அதனை புரிந்துகொண்ட எங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் திரு.தனுஷ் அவர்கள் எங்கள் நிறுவனத்திற்கு படம் நடித்து தரவேண்டும்(முன்பணம் பெற்ற அடிப்படையில் தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் தரவேண்டும்) என்று பேசிக் கொண்டு இருக்கும்போதே தாங்கள் குறுக்கிட்டு, DAWN pictures திரு.ஆகாஷ் அவர்களின் “இட்லிகடை”படப்பிடிப்பு நடக்கவேண்டும்,”மேலிடத்து உத்தரவு” என்று கூறியதை மறந்தீரோ? மேலும் October 30ம் தேதிக்குள் எங்கள் நிறுவனத்திற்கு நியாயம் வாங்கித் தருவதாக தாங்கள் எங்கள் சங்கத்தில் உறுதியளித்தீர்கள்….
பெற்றுத் தருமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்…… இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்