பிரபல சின்னத்திரை நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவியதோடு பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து பின்னணி பாடகி சின்மயி கூறியிருப்பதாவது,”இந்த வீடியோவை உருவாக்கியது, பரப்பியது, பகிர்ந்தது எல்லோரும் ஆண்கள்தான். ஒரு பெண் தனக்கான இடத்தில் நிமிர்ந்து நிற்க முயன்றால், சமூகமே அவளை குற்றவாளியாக காட்டிவிடுகிறது. ஆனால் பாலியல் வசதிக்காக ஒரு பெண்ணை துன்புறுத்தியவர்களை எவரும் கண்டிக்க மறுக்கின்றனர்.இவ்வாறான நிலைமை தொடர்ந்து நீடிக்கிறது. இதை செய்பவர்களும் ஆதரிப்பவர்களும் மக்களால் போற்றப்படுகிறார்கள். ஆனால், ஒரு பெண் என்றால், அவள் தொடர்ந்து தன் திறமையை நிரூபிக்க வேண்டிய நிலை உருவாகிறது. சில ஆண்களுக்கு எதை வேண்டுமானாலும் அடைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், உண்மையான திறமை இல்லாத பிறகு, அவர்கள் சூழ்நிலைகளில் சிறிதளவு முன்னேறினாலும் தங்கள் வஞ்சகமான செயல்களிலேயே தங்களின் முழுப் பலத்தையும் செலுத்துகிறார்கள்.உத்தரப்பிரதேசத்தில் நடந்த கொடூரமான சம்பவங்களை நினைவில் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட மனப்போக்குடைய ஆட்கள் ஊடகம், திரைப்படம், கலை, தொலைக்காட்சி போன்ற துறைகளில் இருப்பது கேவலம்! கலையின் தூய்மை காக்கப்பட வேண்டுமென்றால், இவர்கள் அங்கிருந்து விலக வேண்டும்.”பெண்களை தவறாக நடத்துபவர்களும், அவர்களை அடிமையாக்க நினைப்பவர்களும் தங்கள் குடும்பத்தில் எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் தங்கள் மனைவியிடம், தாயிடம், சகோதரியிடம், மகளிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள்?”சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நடிகையின் வீடியோவை வெளியிட்டவர்கள் யார்? அதை பரப்பியவர்கள் யார்? ஒருவர் படம் எடுத்தாலும், அதை பகிர பலர் தயார் என்கிறார்கள். நாம் முன்னேறிய நாடாக இருந்தாலும், இத்தகைய விஷயங்கள் நடப்பது வேதனை அளிக்கிறது. இப்படிப்பட்ட தீய சக்திகள் முழுவதுமாக அழிந்து நாசமா போக வேண்டும். அவர்களை உருவாக்கிய பின்னணியும் உடனே அழிய வேண்டும்!”என ஏகத்துக்கும் கொந்தளித்துள்ள சின்மயியின் இந்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.