இசையமைப்பாளர், நடிகர் ஜிவி பிரகாஷ் -பாடகி சைந்தவி பிரிவுக்கு பின்னரும் இருவரும் சுமூக நட்புடன் இருந்து வருகின்றனர் . சமீபத்தில் கூட தங்களது விவாகரத்துக்காக நீதிமன்றம் வந்த அவர்கள்; மீண்டும் செல்லும் போது ஒரே காரில் புறப்பட்டு சென்றார்கள். திருமண வாழ்க்கையிலிருந்து பிரிந்தாலும் இசைக்காக அவர்கள் ஒன்றாகவே பயணித்து வருகின்றனர். அதே சமயம் இவர்களது பிரிவுக்கு காரணம் நடிகை திவ்ய பாரதி என சில சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில்,கிங்ஸ்டன் பட ப்ரோமோஷனில் இரண்டு பேருமே அதனை திட்டவட்டமாக மறுத்தார்கள். இப்படிப்பட்ட சூழலில் மீண்டும் ஜிவி விஷயத்தில் தன்னுடைய பெயர் இழுக்கப்படுவதால் கடுப்பான திவ்ய பாரதி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “ஒரு தனிப்பட்ட குடும்ப விவகாரத்தில் எனது பெயர் இழுக்கப்பட்டிருக்கிறது. எனக்கு அதில் எந்தவிதமான தொடர்பும் இல்லை. ஜிவி பிரகாஷின் குடும்ப விவகாரத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. நான் ஒரு நடிகரை எப்போதுமே டேட் செய்யமாட்டேன். அதுவும் ஒரு திருமணமான ஆன ஆணை டேட்டிங் செய்யவே மாட்டேன். ஆதாரமற்ற வதந்திகள் பரவுகின்றன. இதுவரை நான் அமைதியாகத்தான் இருந்தேன். ஆனால் இது ஒரு எல்லையை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதை நான் அனுமதிக்கமாட்டேன். இந்த விஷயத்தில் இதுதான் எனது முதல் மற்றும் இறுதி அறிக்கை” இவ்வாறு அவர் கூறியுள்ளார்