தமிழில் கடந்த 1977-ல் கே பாலசந்தர் இயக்கத்தில்,கமல் ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடித்த ” அவர்கள் ” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து அலாவுதீனும் அற்புத விளக்கும்,பகலில் ஒரு இரவு ,ஆனந்த ராகம், கண்ணோடு கண் ,மலபார் போலீஸ், பொண்ணு வீட்டுக்காரன்,ரோஜா வானம் வண்ணத்தமிழ்ப்பட்டு, ரிஷி,யூத், ரமணா,சிவாஜி, உள்ளிட்ட பல படங்களிலும், சித்தி உள்ளிட்ட பல் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். நடிகர் ரவிக்குமார் சென்னை போரூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 1 வருடமாக உடல் நலக்குறைவு காரணமாக வேளச்சேரியில் உள்ள மருத்துவ மனையில் ‘ஹீமோ தெரபி’ சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் ரவிக்குமாருக்கு கல்பனா என்ற மனைவியும் வசந்த் என்ற மகனும் உள்ளனர் அவரது உடல் பொது மக்கள் பார்வைக்காக போரூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது . ரவிக்குமாரின் மறைவு தமிழ் மற்றும் மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது