பேரரசுவின் உதவியாளர் சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்திருந்த இந்த படம் தற்போது கேரளா மற்றும் கர்நாடகாவில் சுமார் 100 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து படக் குழுவினர் இன்று இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
இந்த படத்தில் கதாநாயகியாக சாய் தான்யா நடித்திருந்தார். மற்றும் பேரரசு, பிளாக் பாண்டி, சன் டிவி ஆதவன், செந்திகுமாரி ஆகியோரும் நடித்திருந்தனர்.