நடிகர் விமல், யோகிபாபு நடிப்பில், இயக்குனர் மஜீத் இயக்கத்தில் முழுக்க முழுக்க காமெடி திருவிழாவாக உருவாகியுள்ள புதிய படம்,கரம் மசாலா. இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க , சாம்பிகா டயானா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், சாம்ஸ், நமோ நாராயண், ஞானசம்பந்தம், பவர் ஸ்டார், ரங்கநாதன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் விஜய்சேதுபதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை வெளியிட்டுள்ளார் இந்த நவீன உலகத்தில் எல்லாமே புரோக்கர் வழியாக என்றாகிவிட்டது. பல வகையான புரோக்கர்களின் வழியாகவே நம் அன்றாட வாழ்க்கை நடக்கிறது. உதாரணமாக வீடு , திருமணம்,தொழில் அனைத்தும் அவர்களின் பங்கு உள்ளது…அந்த புரோக்கர்களால் நிகழும் நல்லதும் கெட்டதும் கலந்த சம்பவங்களை, முழுக்க முழுக்க சிரித்து மகிழும் அருமையான திரைக்கதையாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்.