அஜித் குமார் நடிப்பில் வெளியாகி உள்ள குட் பேட் அகலி திரைப்படத்தில் இளையராஜாவின் பழைய பாடல்களான ஒத்த ரூபாய் தாரேன், என் ஜோடி மஞ்சக்குருவி, ,இளமை இதோ இதோ , உள்பட இளையராஜாவின் மூன்று பாடல்கள் ரீமேக் செய்து பயன்படுத்தப்பட்டுள்ளது.. இதற்கு இளையராஜாவிடம் அனுமதி பெறவில்லை என்று கூறி இசைஞானி இளையராஜா தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. படத்தில் தான் இசையமைத்த பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதால் 5 கோடி கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.திரையுலகில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,மைத்ரி மூவி மேக்கர்ஸ்க்கு நோட்டீஸ் அனுப்பியது ஏன் என இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சரவணன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது,”குட் பேட் அகலி திரைப்படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம்.. அவர்கள் இந்த பாடல்களை பயன்படுத்தும் முன்பு, இசைஞானி இளையராஜா அவர்களிடம் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.. அவருடைய பாடல்கள்.. அவர் இயக்கி இசையமைத்துள்ள பாடல்களை அனுமதி பெறாமல் பயன்படுத்தி உள்ளார்கள்.. எனவே நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.நம்முடைய காப்புரிமை சட்டப்படி, படைப்பாளிகளின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். யாரும் அதனை மீறக்கூடாது.. அதை ஜஸ்ட் லைக் என்ற பாணியில் சற்று உருமாற்றம் செய்து லாபம் அடைய கூடாது என தெளிவாக சட்டத்தில் கூறியிருக்கிறார்கள்.. அந்த சட்டங்களின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பாடல்களை அவர்கள் அப்படியே பயன்படுத்தி இருந்தால் கூட பரவாயில்லை.. ஆனால் அதனை உருமாற்றம் செய்திருக்கிறார்கள்..அப்படி உருமாற்றம் அதாவது ரீமேக் செய்யும் போது, அதனை படைத்த படைப்பாளிக்கு கேள்வி எழுப்ப உரிமை உள்ளது. ரீமேக் என்ற பெயரில் கேலி, கிண்டல் செய்வது என்பது படைப்பாளியின் மனதை புண்படுத்தும் விஷயம். அதனை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தெளிவாக சட்டம் என்ன சொல்கிறது என்றால், படைப்பாளி தயாரித்ததை அவரின் அனுமதியின்றி உருமாற்றம் செய்வது தவறு என்று சொல்கிறார்கள்.. அந்த அடிப்படையில் இரண்டு விஷயங்களுக்காக நோட்டீஸ் அனுப்பி உள்ளோம்.ஒன்று முன் அனுமதியின்றி அவரது பாடல்களை பயன்படுத்தி உள்ளார்கள்.. இரண்டாவதாக ரீமேக் செய்திருக்கிறார்கள். இந்த இரண்டு விஷயங்களின் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் கூறியுள்ளார்