தமிழ்த்திரையுலகில் ‘ராஜாராணி’ நய்யாண்டி, நேரம், வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்கா” உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ராவர் நடிகை நஸ்ரியா. இவர் பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில்தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாளப்படங்களில் நடித்து வந்த நஸ்ரியாவின் நடிப்பில் கடைசியாக “”சூக்ஷம தர்ஷினி\” என்ற படம் வெளியானது அதன் பின் திடீரென நஸ்ரியா எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் இருந்து வந்தார் மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வந்த அவர் பல மாதங்களாக இன்ஸ்டா பக்கத்தில் எதுவும் வெளியிடவில்லை.இந்நிலையில், நடிகை நஸ்ரியா திடீரென நீண்ட அறிக்கை ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ” “அனவைரும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். கடந்த சில நாட்களாக நான் பொதுவெளிக்கு வராதது பற்றிய காரணத்தை இங்கு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். இந்த அற்புதமான சமூகத்தில் நான் என்போதும் ஆக்டிவாக இருந்த பெண்ணாக இருந்து வந்தேன். ஆனால் கடந்த சில மாதங்களாக எனது உணர்ச்சி நலன் மற்றும் தனிப்பட்ட சவால்கள் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்தேன். எனவேதான் என்னால் பொது சமூகத்தில் ஆக்டிவாக இருக்க முடியாமல் போனது. ஆகவேதான் நான் விலகி இருந்தேன். நான் எனது 30வது பிறந்த நாளையும், புத்தாண்டையும், சூக்ஷமதாரி என்கிற திரைப்பத்தின் வெற்றியையும்கூட கொண்டாட தவறிவிட்டேன். என் நண்பர்களின் அழைப்புகளுக்கு கூட என்னால் பதில் அளிக்க முடியவில்லை. ஏன் பதிலளிக்காமல் நான் விலகினேன் என்பதை தெளிவுப்படுத்தாமலேயே போய்விட்டேன். இந்த செயலுக்காக நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நண்பர்களிடம் மன்னிப்பை கோரும் அதே நேரம் நான் என் சக ஊழியர்களிடமும் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்.ஏனெனில் அவர்கள் அழைப்பை நான் ஏற்காமல் இருந்ததால் அவர்கள் பெரும் பாதிப்பை சந்தித்திருக்கலாம். இப்போது ஒரு நல்ல செய்தி கிடைத்திருக்கிறது. கேரள திரைப்பட விமர்சகர் விருது, அதாவது சிறந்த நடிகைக்கான விருது நேற்று எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது எனக்கு மகிழ்ச்சியளித்திருக்கிறது. என் பயணம் மிகவும் கடினமாக இருந்தாலும் நான் அதிலிருந்து மீண்டு வர கடுமையாக முயற்சி செய்து வருகிறேன். முழுமையாக மீண்டு வர இன்னும் சிறிது காலம் கூட எனக்கு தேவைப்படலாம். ஆனால் நிச்சயம் மீண்டும் நான் மீண்டு வருவேன்.அந்த வகையில் இந்த பதிவை இன்றே எழுத நான் முடிவெடுத்தேன். ஏனனில் எனது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது இடைவெளிக்கான காரணம் தெரிய வேண்டும். உங்களது ஆதரவுக்கு மிக்க நன்றி. விரைவில் உங்களை அனைவரையும் சந்திப்பேன். லவ்யூ ஆல்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.