சின்னத்திரை நடிகை பவித்ரா லட்சுமி. இவர் ‘ஓகே கண்மணி’, ‘நாய் சேகர்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.பிரபல மாடலாகவும் வலம் வரும் பவித்ரா லட்சுமி தனது போட்டோ சுட கவர்ச்சி புகைப்படங்கள் மாற்று வீடியோக்களை தனது சமூக வலை தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் இந்நிலையில்,பவித்ரா லட்சுமி கடைசியாக வெளியிட்ட
காணொளியில்அவரது முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும், உடல் மெலிந்து காணப்படுவது குறித்தும் இணையத்தில் பல விதமான கருத்துக்கள் பரவி வரும் நிலையில், அது குறித்து சிறிய விளக்கம் கொடுத்த நிலையிலும் அவரது உடல்நிலை குறித்து பல விதமான தகவல்கள் பரவி வருகிறது.இதனால் கடுப்பான பவித்ரா லட்சுமி,தனது இன்ஸ்டா பக்கத்தில் ,”என்னுடைய உடல் எடை மற்றும் தோற்றம் குறித்து பல்வேறு ஊகங்கள் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது இதற்கு என் தரப்பில் இருந்து போதுமான விளக்கங்கள் அளிக்கப்பட்டபோதும் இது நிற்கவில்லை. நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறேன் அதைச் செய்திருக்கிறேன், இதைச் செய்திருக்கிறேன் என்பது போன்ற நம்பத் தகாத வதந்திகளை பரப்புவது உணர்ச்சியற்ற செயலாக மட்டுமல்லாமல் கொடுமையானதாகவும் இருக்கிறது. அதனை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை மீண்டும் சொல்கிறேன் நான் சீரியஸான உடல்நல பிரச்சனையில் இருக்கிறேன். அதற்கான சிகிச்சையும் எடுத்துக் கொள்கிறேன். உண்மையிலேயே என் மீது கரிசனமும் அன்பும் கொண்டு என்னைப் பற்றி விசாரித்த நபர்களுக்கு நன்றி. தயவுசெய்து என்னைப் பற்றி தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் எனக்கும் வாழ்க்கை இருக்கிறது. இவ்வாறான வதந்திகளை பரப்பி ஏற்கனவே கடினமானதாக இருக்கும் சூழ்நிலையை இன்னும் கடினம் ஆக்கி விடாதீர்கள் .இக்கட்டான பிரச்சனைகளிலிருந்து நான் விரைவில் மீண்டு வருவேன்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்