நடிகை, இசையமைப்பாளர், பாடகி என பன்முக கலைஞராக வலம் வரும் உலகநாயகனின் வாரிசு ஸ்ருதிஹாசன், ரஜினிகாந்த் நடித்து வரும் “கூலி”, விஜய் நடித்து வரும் “ஜனநாயகன்” இயக்கத்தில், விஜய் சேதுபதியின் “ட்ரெயின்” உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும், தெலுங்கில் உருவாகி வரும் “சலார் ” இரண்டாம் பாகத்திலும், இன்னொரு தெலுங்கு படத்திலும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில்,இன்ஸ்டாகிராமில் 24 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்துள்ள ஸ்ருதிஹாசன் தற்போது தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து,”எப்போதும் எனக்கு ஒளியும் சக்தியும் அளிக்கிறவரும், எந்நேரமும் சிரிப்புக்கு காரணமானவரும் நீங்க தான், உங்களைதான் மிக அதிகமாக நேசிக்கிறேன் அப்பா” என தந்தை கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து நடிகை ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.