தருண் கிஷோர் சுதீர் தயாரிப்பில், புனித் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகும் ‘ஏழுமலை’ படத்தின் தலைப்பு டீசர் வெளியீட்டு விழா, பெங்களூருவில் உள்ள ஓரியன் மாலில் நடந்தது. இவ்விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவராஜ்குமார் படத்தலைப்பு டீசரை வெளியிட்டு, படக்குழுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அற்புதமான காதல் கதையாக உருவாகும் இப்படத்தில், ரக்ஷிதாவின் தம்பி ராண்ணா கதாநாயகனாகவும், ‘மகாநதி’ பிரியங்கா ஆச்சார் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் சிவராஜ்குமார் பேசுகையில்,”இந்த டீசர் அருமையாக இருக்கிறது. நல்ல விஷயங்கள் நல்லவர்களுக்கே நடக்கின்றன என்பதற்கு இது ஒரு சாட்சி. ராண்ணா மிகவும் ஹேண்ட்சமாக இருக்கிறார். பிரியங்காவைப் பார்க்க ஒரு புதியவரைப் போலத் தெரியவில்லை. புதியவர்கள் வந்து சினிமாவை மாற்றவேண்டும். மக்கள் பாராட்டினால் லாபம் தானாக வரும். அது தான் எப்போதும் நடந்து வருகிறது. இப்படக்குழுவிற்கு என் வாழ்த்துக்கள்”இவ்வாறு அவர் பேசினார்.இப்படத்தின் ஒளிப்பதிவை அத்வைதா குருமூர்த்தி மேற்கொள்ள, டி. இமான் இசையமைத்து வருகிறார்