பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (வயது 87) வயது மூப்பு காரணமாக இன்று காலை பெங்களூரில் மல்லேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் அவரது மறைவு தமிழ் மற்றும் கன்னட த்திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சரோஜா தேவியின் உண்மைப் பெயர் ராதாதேவி கவுடா . இவர் மைசூரில் பைரப்பா- ருத்ரம்மா ஆகியோரின் நான்காவது மகளாவாக 1938-ல் ஜனவரி 7ம் தேதி பிறந்தார்.”1960-களில் தமிழ் திரையுலகம் கொண்டாடி தீர்த்த ஒரு நடிகை என்றால் அது சரோஜாதேவியாக மட்டும்தான் இருக்க முடியும். கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் இவருக்கு பரதநாட்டியமோ, நாடகத்தில் நடித்த அனுபவமோ கிடையாது. இருப்பினும் தன் நடிப்பாலும், உடல் அசைவுகளாலும், நளினத்தாலும் கவர்ச்சியே காட்டாமல் ஒட்டுமொத்த தென்னிந்திய திரை உலகையே கட்டிப்போட்டு திரைப்படத்துறையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக வெற்றிகரமாக பயணித்தவர். நடை, உடை, பாவனை, சிகை அலங்காரம், நடிப்பு போன்ற எல்லாத் துறைகளிலும் இவர் அறிமுகப்படுத்திய புதுமைகள் அவரது தனித்துவத்தைப் புதிதாய் மின்னச் செய்தன. இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட சரோஜாதேவி ஜனவரி 7 தனது 87-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்தப் பொன்னான நாளில், அவரது திரைப்பயணத்தையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இங்கு பார்க்கலாம்.ஆரம்பகால வாழ்க்கைசிறுமியாக நடிகை சரோஜாதேவி அன்றைய காலகட்டத்தில் இந்திய பட உலகின் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த சரோஜா தேவி, 1938-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி பெங்களூரில் பிறந்தார். காவல்துறை அதிகாரியான பைரப்பா மற்றும் ருத்ரம்மா தம்பதியினரின் நான்காவது மகளாகப் பிறந்த இவர், ஐந்து பெண் குழந்தைகளில் ஒருவராக இருந்தார். குடும்பத்தினர் ஆண் குழந்தையை எதிர்பார்த்த நிலையில், சரோஜாவியின் பிறப்பால் அவர்கள் மன வருத்தத்திற்கு உள்ளானார்கள். குறிப்பாக, அவரது தாத்தாவுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. ஆனால், அவரது தாயின் அளவு கடந்த அன்பு சரோஜாவை உற்சாகமாக வளரச் செய்தது. பள்ளிக் காலத்திலேயே தனது திறமைகளை வெளிப்படுத்திய சரோஜா தேவி, பெங்களூரிலுள்ள புனித தெரசா பள்ளியில் கல்வி பயின்ற போது, ஒரு இசை நிகழ்ச்சியில் பாடியதன் மூலம் கன்னட திரையுலகின் புகழ்பெற்ற ஹொன்னப்ப பாகவதரின் கவனத்தை பெற்றார். அவரது அழகும் திறமையும் பாகவதருக்கு பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. இதனால், சரோஜாவை திரைப்பட நட்சத்திரமாக மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை பாகவதர் மேற்கொண்டார்.ஹொன்னப்ப பாகவதர் தயாரித்த ‘மகாகவி காளிதாஸ்’ என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான சரோஜா, முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்றார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்த அவர், இந்திய திரைப்பட உலகின் முன்னணி நடிகையாக உயர்ந்தார். சிறு வயதில் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட உணர்வுடன் வளர்ந்த சரோஜா, பின்னாளில் தனது தாத்தாவின் அன்பையும் ஆதரவையும் பெற்றார். அவருடைய மேன்மையான சாதனைகளும் புகழ் ஏணியின் உச்சிக்குச் செல்வதுமான வெற்றிகளுமே இந்த மன மாற்றத்திற்கான காரணம் என்று கூட சொல்லலாம்.தமிழ் சினிமாவில் அறிமுகம்’அன்பே வா’ திரைப்படத்தில் சரோஜா தேவிஹொன்னப்ப பாகவதரின் வழிகாட்டுதலில் கன்னட சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான சரோஜா தேவி, தமிழ் சினிமாவில் கால் பதிக்க சிவாஜி கணேசன் நடித்த ‘தங்கமலை ரகசியம்’ திரைப்படம் காரணமாக அமைந்தது. பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியத்தின் உதவியுடன் இப்படத்தில் நடன மங்கையாக தோன்றி, ‘யவ்வனமே என் யவ்வனமே…’ என்ற பாடலில் நடனமாடி அசத்தியிருந்தார். இப்படத்தில் சிவாஜி, ப. நீலகண்டன், பந்தலு உள்ளிட்ட பலர் சரோஜா தேவியின் அழகைப் பார்த்து பத்மினி, வைஜெயந்தி மாலா போல் இருப்பதாக வியந்துள்ளனர். குறிப்பாக இயக்குநர் ப. நீலகண்டன், சரோஜா தேவிக்கு தமிழ் சினிமாவில் நிச்சயம் பெரிய வருங்காலம் இருக்கும் என்று உறுதியாக நம்பியுள்ளார். இதையடுத்து ஜெமினி கணேசன் நடித்த ‘பூலோக ரம்பை’ படத்தில் ‘தேனைப் போலே தேடி வா…’ என்ற பாடலில் வில்லன் பி.எஸ். வீரப்பாவுக்கு ஜோடியாக நடனமாடியிருந்தார். இந்தப் படத்தில் சரோஜா தேவியின் பெயர் தனியாக டைட்டில் கார்டில் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கன்னடத்தில் எடுத்த எடுப்பிலேயே கதாநாயகியாக வலம் வந்த சரோஜா தேவிக்கு, தமிழில் தொடக்கத்தில் சிறு வேடங்களே கிடைத்தன. இந்த வேளையில் , எம்.ஜி.ஆருடன் அவர் நடித்த ‘நாடோடி மன்னன்’ திரைப்படம்தான் அவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த வாய்ப்பு அவருக்கு எளிதாகக் கிடைக்கவில்லை என்றாலும், தனது திறமையால் அனைவரையும் கவர்ந்து இன்றும் நம் நினைவில் நிற்கும் ஒரு நடிகையாக திகழ்கிறார் சரோஜா தேவி.வாழ்வை மாற்றிய எம்.ஜி.ஆர்’அரச கட்டளை’ திரைப்படத்தில் மக்கள் திலகத்துடன் ஒரு காட்சியில் சரோஜா தேவிநாடோடி மன்னன் படத்தில் நடிப்பதற்கு முன்பாக இயக்குநர் கே.சுப்பிரமணியம் தயாரித்த ‘கச்ச தேவயானி’ என்ற கன்னட படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் சரோஜா தேவி. அப்போது இயக்குநர் கே.சுப்பிரமணியத்தை சந்திக்க வந்த எம்.ஜி.ஆர், அங்கே நடித்து வந்த புதுமுக நடிகையைக் கண்டு, “யார் அந்த பெண்? என்று இயக்குநர் கே. சுப்பிரமணியத்திடம் கேட்டுள்ளார்.”அவர் பெயர் சரோஜா தேவி, பெங்களூரைச் சேர்ந்தவர்,” என்ற பதில் அப்போது வந்துள்ளது. அது முடிந்து எம்.ஜி.ஆர் அமைதியாக அங்கிருந்து சென்றாலும், அவரது மனதில் ஒரு திட்டம் பிறந்தது. அவர் நடிக்க இருந்த ‘திருடாதே’ படத்திற்கு சரோஜா தேவியை கதாநாயகியாக தேர்வு செய்ய விரும்பினார். இதனால் சரோஜா தேவியை அழைத்து மேக்கப் டெஸ்ட் நடத்தப்பட்டது. பிறகு படக்குழுவினர் புதுமுகத்தை நாயகியாக கொண்டுவர குழப்பம் காட்டினாலும், எம்.ஜி.ஆர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். ஒருகட்டத்தில் ‘திருடாதே’ படத்தின் படப்பிடிப்பு தாமதமானதால், எம்.ஜி.ஆர் தனது சொந்த தயாரிப்பான ‘நாடோடி மன்னன்’ படத்தில் சரோஜா தேவியை இரண்டாவது கதாநாயகியாக அறிமுகம் செய்ய முடிவு செய்தார். ஆரம்பத்தில் பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு இணையாக சரோஜா தேவியின் நடிப்பும் இருந்ததால் பலராலும் அவர் பாராட்டப்பட்டார். இதற்கு பிறகு இந்த கூட்டணி நாடோடி மன்னன் தொடங்கி தொடர்ந்து 26 படங்களில் ஜோடி சேர்ந்து நடித்து, தமிழ் சினிமாவின் கலைப் பொக்கிஷமாக மாறிபோனார். கன்னட திரைப்படத்தில் அறிமுகமான சரோஜா தேவி தனது முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றவர். அதை தொடர்ந்து, தமிழில் 1958ம் ஆண்டு எம்ஜிஆரின் நாடோடி மன்னன் படத்தில் அறிமுகம் ஆனார். அடுத்து இயக்குநர் ஸ்ரீதரின் கல்யாணபரிசு படத்தில் 1959ல் நடித்தார்.பார்த்திபன்கனவு, அன்பேவா, ஆசைமுகம், ஆலையமணி , கல்யாணபரிசு, எங்கள் வீட்டுப்பிள்ளை என அடுத்தடுத்து சரோஜா தேவி நடித்த படங்கள் அனைத்தும் அவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.எந்த விதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு கனகச்சிதமாக பொருந்த கூடியவர் சரோஜா தேவி. மேலும் தனது திறமை மிக்க நடிப்பால் கொடுக்கப்படும் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுப்பவர்.சரோஜா தேவியின் கோபால் வசனமும், லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் பாடலும் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்படும் ஒன்று என்றே கூறலாம். உச்சநட்சத்திரங்களான சிவாஜி மற்றும் எம்ஜியாருடன் அதிக பாடங்களில் நடித்த நடிகை இவர். காலையில் சிவாஜியுடனும் மாலையில் எம்ஜியாருடனும் நடிப்பாராம் சரோஜா தேவி. இதில் எம்ஜியாருடன் 26 படங்களிலும், சிவாஜியுடன் 22 படங்களிலும் நடித்துள்ளார்.நடிகை சரோஜா தேவி இந்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், மற்றும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் பல அரசு விருதுகளும் அள்ளிக்குவித்துள்ளார்.தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என மொத்தம் 200 படங்களில் நடித்துள்ளார் சரோஜா தேவி. கடைசியாக 2009-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘ஆதவன்’ படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது