மகிழ் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிவ கணேஷ் தயாரிக்கும் புதிய படத்துக்கு ‘ராயல் சல் யூட்’ என பெயரிடப்பட்டுள்ளது .இப்படத்தில் புதுமுகங்கள் பிரதீப், யுவராஜ், சுபாஷ், சிம்பு, எம்ஜிஆர் இன்பா, ஜனனி உள்பட பலர் நடித்துள்ளனர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ஜெய் சிவ சேகர். இந்தியா- பாகிஸ்தான் எல்லை பிரச்சினை ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து வரும் நிலையில், இந்தியா பாகிஸ்தான் ஒற்றுமையை வலி யுறுத்தும் விதமாக ஒரு சிறந்த கருத்தை சொல்லும் விதமாக ராயல் சல்யூட் படம் அமைந்துள்ளது. நேர்மையான ராணுவ வீரன் வீரன் சக்திவேல் எல்லைப் பகுதியில் மாட்டிக்கொள்கிறான். பாகிஸ்தான் ராணுவ வீரன் பக்ரு, சக்திவேலை காப்பாற்றுகிறான். ஒரு சூழலில் இந்திய ராணுவ வீரர்கள் வசம் பக்ரு மாட்டிக்கொள்ள, பக்ருவை சுட்டுக்கொல்ல, உயர் அதிகாரி சக்திவேலுக்கு உத்தரவிடுகிறார். இதையடுத்து என்ன நடக்கிறது? சக்திவேல் பக்ருவை சுட்டுக்கொன்றானா, இல்லையா?என்பது தான் இப்படத்தின் பரபரப்பான திரைக்கதையாக்கப்பட்டுள்ளது.இப்