பிரபல மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் (வயது 51) நடித்து வரும் ‘பிரகாம்பனம்’ என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பு எர்ணாகுளத்தில் நடந்து வருகிறது . இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக எர்ணாகுளம் வந்த கலாபவன் நவாஸ் சோட்டாணிக்கராவில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளார். ஆனால், நேற்று படப்பிடிப்பு முடித்ததால், நவாஸ் அறையை காலி செய்ய திட்டமிட்ட கலாபவன் நவாஸ், ஓட்டல் ஊழியரிடம் பேருந்து மற்றும் ரயில் நேரம் குறித்து விசாரித்து உள்ளார். இதுகுறித்து, நவாஸில் தெரிவிப்பதற்கான அந்த ஊழியர் சென்ற போது, நடிகர் தனது அறையில் மயக்கமடைந்து சுயநினைவு இல்லாமல் கிடந்துள்ளார். இதையடுத்து பதறிப்போன இதைத்தொடர்ந்து, ஓட்டல் ஊழியர்கள் கலாபவன் நவாஷை மீட்டு , அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது , இதையடுத்து கலாபவன் நவாஸ் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்று அவரது அறையை போலீசார் தீவிரமாக சோதனையிட்டனர். சிசிடிவி ஆதாரங்களையும் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய சோட்டாணிக்கரா காவல் நிலைய அதிகாரி, அவர் தங்கி இருந்த ஓட்டல் அறையில் சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. கலாபவன் நவாஸ் உயிரிழந்தது குறித்து அவரது உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சோட்டாணிக்கராவில் உள்ள எஸ்டி டாடா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்றார். மேலும் போஸ்ட் மார்ட்டம் அறிக்கை வந்த பிறகே அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். கலாபவன் நவாஸ் மறைவு மலையாள திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
கலாபவன் நவாஸ் மறைவுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.மலையாள சினிமாவில் மிமிக்ரி கலைஞரான கலாபவன் நவாஸ், பின்னணிப் பாடகர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் 1995 ஆம் ஆண்டு சைதன்யம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர். மிமிக்ஸ் ஆக்ஷன் 500, ஹிட்லர் பிரதர்ஸ், ஜூனியர் மாண்ட்ரேக், மாட்டுப்பெட்டி மச்சான், அம்மா அம்மாய்யம்மா, சந்தமாமா மற்றும் தில்லானா தில்லானா உள்ளிட்ட பல திரைப்படங்களிலும், கலாபவன் சக்கர முத்து , சட்டம்பிநாடு, சீனியர் மாண்ட்ரேக் மற்றும் வலியங்கடி, வீரபுத்திரன் , தல்சமயம் ஒரு பெண்குட்டி , ஏபிசிடி: அமெரிக்கன்-பார்ன் கன்ஃப்யூஸ்ட் தேசி என ஏராளமான படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், காமெடி மாஸ்டர்ஸ், காமெடி ஸ்டார்ஸ் சீசன் 2, தக்கார்ப்பன் காமெடி போன்ற ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.