நடிகர் மதன் பாப் புற்று நோய் காரணமாக சென்னையில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5 மணியளவில் உயிரிழந்தார். தற்போது அவரது உடல் திருவான்மியூரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது அவரது உடலுக்கு திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது இறுதிச்சடங்கு நடைபெறுகிறது இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் சென்னையில் 1953 -ம் ஆண்டு பிறந்த நடிகர் மதன்பாப்பின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி ஆகும். இவரது வித்தியாசமான சிரிப்பு மிகவும் பிரபலம். தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார் தமிழில் நீங்கள் கேட்டவை, வானமே எல்லை, தேவர் மகன், ஜாதி மல்லி, உழைப்பாளி, திருடா திருடா, மகளிர் மட்டும், சதிலீலாவதி, பூவே உனக்காக, தெனாலி, ஃபிரெண்ட்ஸ், பம்மல் கே சம்பந்தம், கிரி, மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் இவரது நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகின்றன.