நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் த.செ. ஞானவேல் இணைந்து உருவாக்கிய அகரம் பவுண்டேஷனின் 15வது ஆண்டு விழா சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட நடிகரும் மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் எம் பி. பேசியதாவது,” அன்பும் கல்வியும் எல்லா இடங்களிலும் கிடைக்காது. அம்மாவிடம் கிடைக்கும் அதன் பின்னர் அகரத்தில் கிடைக்கும் (இவ்வாறு கமல்ஹாசன் பேசியபோது ,சூர்யா எமோஷனலாகி கமல்ஹாசனுக்கு அருகில் சென்றார்). சூர்யா பேசும்போது நான் எனது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக, நற்பணி இயக்கமாக மாற்றியதுதான் காரணம் எனக் கூறினார். ஆனால் நான் அவரது அப்பா சிவக்குமாரின் அறிவுரையின் பெயரில்தான் நற்பணி மன்றங்களைத் தொடங்கினேன்.அதாவது நான் ரசிகர் மன்றம் தொடங்கும் போது என்னைக் கண்டித்தவர் சூர்யாவின் அப்பா சிவக்குமார். அவர் கூறினார், ரசிகர் மன்றமெல்லாம் நடிகர்கள் அரசியலுக்குச் செல்ல போட்ட திட்டங்கள். ஆனால் நீ ஏன் இவ்வாறு எல்லாம் செய்கிறாய் என்று கேட்டார். அதன் பின்னர் தான் எனது ரசிகர்கள் மன்றத்தை நற்பணி மன்றமாகவும் இயக்கமாகவும் மாற்றினேன். அதன் பின்னர் அதை சிவக்குமார் அண்ணனிடமும் கூறிவிட்டேன்.,அவரும் நானும் பேசிக்கொண்டு இருந்தால் எங்களது பேச்சை நிறுத்த முடியாது. அவர் பேசி பேசி தான் நான் இன்றைக்கு இப்படி உள்ளேன். எனக்கு கூறியதை சூர்யாவுக்கும் கார்த்திக்கும் சொல்லி இருப்பார் அல்லவா. எனது நற்பணி மன்றங்களின் செயல்பாடுகள் அகரம் தொடங்க காரணமாக இருந்தது என்று கூறினார் சூர்யா. இன்றைக்கு அகரத்தின் மூலம் மருத்துவர்கள் ஆனவர்கள் மேடை ஏறினார்கள். ஆனால் 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் மாணவர்கள் மருத்துவர்களாக மாற முடியவில்லை. அதற்கு காரணம், நீட். அதிகாரச் சங்கிலிகளையும் சனாந்தனச் சங்கிலிகளையும் உடைக்கும் சக்தி கல்விக்கு மட்டுமே உள்ளது.எனது நற்பணி மன்றங்களின் பார்வையில் இருந்து பார்த்தால் இவரை நான் அண்ணா என்று அழைக்கவா? தம்பி என்று அழைக்கவா என குழம்பிப்போய் உள்ளேன். அவர் என்னை சித்தப்பா என்று அழைப்பதா? அண்ணா என்று அழைப்பதா என்று குழப்பத்தில் இருப்பதாக கூறினார். குழப்பமே வேண்டாம், அன்போடு அழையுங்கள் இந்த உறவு நீடிக்கட்டும்” இவ்வாறு அவர் பேசினார் தொடர்ந்து அகரம் பவுண்டேஷனின் செயலியை கமல் ஹாசன். அறிமுகம் செய்து வைத்தார்