இதுவரை பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு இப்படம் அனுப்பப்பட்டு 22 விருதுகளை பெற்றுள்ளது.. இன்னும் பல திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டும் இருக்கிறது..இப்படம் குறித்து இயக்குநர் பொன்முடி திருமலைசாமி கூறும்போது, “ஒரு காலத்தில் சைக்கிள் வைத்திருப்பதே மிகப்பெரிய கௌரவமாகவும் பெரிய விஷயமாகவும் பார்க்கப்பட்டது. சொல்லப்போனால் ஒரு காருக்கு நிகராக அதை பலர் கருதினார்கள். அதை மையப்படுத்தி தான் இந்த படத்தின் கதையை உருவாக்கினேன்.இந்த படத்தின் மைய கதாபாத்திரமாக மதுரையை சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் கௌதம் நடித்துள்ளார். நாக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், திக்குவாய் பிரச்சனை கொண்ட அந்த பையனுக்கு 6 மாதம் பேச்சு மற்றும் நடிப்பு பயிற்சி கொடுத்தேன். இந்த படத்தில் மிக சிறப்பாக பேசி நடித்துள்ளார். இது விருதுக்கான படம் என்றாலும் கூட, இதில் மூன்று பாடல்களும் ஒரு சண்டைக் காட்சியும் இடம்பெற்றுள்ளன. அதில் ஒரு பாடல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. இது தமிழ் சினிமாவில் இதுவரை வராத வித்தியாசமான காதல் கதையாக இருக்கும் ” இவ்வாறு அவர் கூறினார் . விரைவில் இப்படத்தின் டிரைலர் வெளியாக உள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று இப்படம் படம் வெளியாக உள்ளது என திரைப்பட குழு அறிவித்துள்ளது.