நடிகர்,இயக்குனர் டி.ராஜேந்தர் கூறியதாவது, ” ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படத்தை தற்போதையை 4-கே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளியிட திட்டமிட்டுள்ளேன். தொடர்ந்து, எனது பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளேன். அதற்காக, டி.ஆர்.டாக்கீஸ் என்ற நிறுவனத்தையம் தொடங்கி இருக்கிறேன்.
பல புதுமுக நடிகர்களை அறிமுகப்படுத்திய நான், தற்போது உள்ள திரை உலகத்தினரை கண்டு வருத்தப்படுகிறேன். தமிழ் திரையுலகில் காமெடி நடிகர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. புதிய நகைச்சுவை நடிகர்களை அறிமுகப்படுத்த வேண்டும். நான் புதிய படம் எடுத்தால் கிரீன் மேட் சாட்ஜிபிடி ஏ.ஐ.டெக்னாலஜி பயன்படுத்தி எடுப்பேன்” இவ்வாறு அவர் தர் கூறினார்.