எழுத்தாளர் ரூபன் கதை வசனம் எழுதியுள்ளார். பிரபல இயக்குநர் வின்செண்ட் செல்வா, இப்படத்தின் திரைக்கதை எழுதியிருப்பதுடன் தயாரிப்பு மேற்பார்வை பணிகளையும் செய்துள்ளார். குடும்பத்தோடு அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், ஒரு அழகான கமர்ஷியல் படமாக, இப்படத்தை இயக்கியிருப்பதுடன் நாயகனாகவும் நடித்துள்ளார் சரீஷ். மேலும் அடுத்தடுத்து மேலும் பல சிறப்பான படங்களை இயக்கி நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் சரீஷ் நாயகனாக நடிக்க,அர்திகா நாயகியாக நடித்துள்ளார். நடிகர் தம்பி ராமையா இதுவரை ஏற்றிராத புதுமையான பாத்திரத்தில், சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளார். இப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் கொடைக்கானலில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.