எனக்கும் சில நெகட்டிவிட்டி வந்தது. என் சொத்துகள் முடக்கப்படுவதாக செய்திகள் வெளியானது. ஆனால், அப்படி எதுவும் இல்லை. என் உண்மையான சொத்து இங்கு வந்திருப்பவர்கள்தான். காசு, பணம் சம்பாதிப்பதெல்லாம் சொத்து கிடையாது. இந்த அன்பைச் சம்பாதிப்பவன் தான் வாழ்க்கையில் வெற்றியாளன்..”ஒரு மனிதன் ஒரு இடத்தில் சிக்கிக்கொள்ளும் போது கடவுள் ஒரு விஷயத்தை அனுப்புவார். அது காசு, பொருள், வாகனம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த மாதிரி கடவுள் கொடுத்த ஒரு கிஃப்ட் தான் எனக்கு கெனிஷா. நான் யார் என்பதை எனக்கே உணர வைத்தவர் அவர்தான். அவங்களை மாதிரி எல்லார் வாழ்க்கையிலும் ஒருத்தவங்க இருக்கணும்னு ஆசைப்படுறேன்” என்றார்நெகிழ்ச்சில் கண்கலங்கியபடியே. . ரவி மோகனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட கெனிஷாவும் கண்கலங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஜெனிலியா ரவி மோகன் இருவரும் சேர்ந்து சந்தோஷ் சுப்ரமணியன் சீனை ரீ-கிரியேட் செய்ததைப் பார்த்தது எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஜெனிலியா மேம். ரித்தேஷ் சார் ஐ லைக் சார். என்னை தவறாக நினைக்காதீர்கள்.நான் காலேஜ் படிக்கும் போது சந்தோஷ் சுப்ரமணியம் படத்தை மூன்று முறை பார்த்திருக்கிறேன். அவர்களை இந்த மேடையில் பார்க்கும் போது ஒரு நாஸ்டாலஜிக்காக இருந்தது. ஜெனிலியா ரவி மோகன் இணைந்து மீண்டும் ஒரு படம் நடிக்க வேண்டும்.”என கூறினார்
ரவி மோகன் நடிப்பில் தற்போது ஜீனி திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. மேலும் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் வில்லனாக நடிக்கிறார். டாடா பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடித்து வரும் கராத்தே பாபு திரைப்படம் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாகவும் இருந்து வருகிறது .