தரன் இசையமைத்து நடித்த  ‘கிம்ச்சி தோசா’ !


 சியர்ஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம்  தயாரித்துள்ள ‘கிம்ச்சி தோசா’ என்ற மியூசிக் வீடியோ ஆல்பம் தற்போது வெளியாகியுள்ளது.  ரவிவர்மன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள ..இந்த வீடியோ பாடல் இந்தோ கொரியன்  கூட்டணியில்  உருவாகியுள்ளது. இந்த ‘கிம்ச்சி தோசா’ ஆல்பத்தை இசையமைத்து நடித்தும் இருக்கிறார் பிரபல இசையமைப்பாளர் தரன்,இந்த  ‘கிம்ச்சி தோசா’  இசை ஆல்பத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் முதன்முறையாக  நடித்துள்ளார் , இவருடன் சேர்ந்து கார்பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் , இசையமைப்பாளர் தரன், தென்கொரியாவின் பிரபல ஏ.ஏ.பேண்டின்  பாடகர் அவுரா, மற்றும் ‘குடும்பஸ்தன்’  கதாநாயகி சான்வி ஆகியோர் நடித்துள்ளார்.