இது துப்பாக்கி படத்தோட தொடர்ச்சியா அல்லது அதன் மறு வடிவமா? என கேட்கிறார்கள். இதுல துப்பாக்கி மட்டும் தான் இருக்கு இது வேற மாதிரியான கதை வழக்கமா என் படங்கள்ல இருக்கிற, காமெடி, ஜாலி விஷயங்கள் இதுல குறைவா இருக்கும். முதல் பாதி ஜாலியா இருக்கும் இரண்டாம் பாதி ஆக்சனில் ‘தெறி’க்கும் என்றவர்,ஏ ஆர் முருகதாஸுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து கூறுகையில்,” ‘டாப்’ ஹீரோக்களை இயக்கியவராச்சே எனக்கு ஒரு தயக்கம் முதலில் இருந்தது. ஆனால் அவர்கிட்ட வேலை பார்க்கிறது ஈசி. ரொம்ப நிதானமா, அமைதியாதான் ஷூட்டிங் ஸ்பாட்ல வேலை பார்ப்பார். பரபரன்னு இருக்க மாட்டார். அவரோட வேலை பார்த்தது பிடிச்சிருந்தது.இந்த படத்தோட ஷூட்டிங் நடந்துட்டு இருக்கும்போது, ‘இது ஷாருக்கானுக்கு சொன்ன ஐடியா’ன்னு எங்கிட்ட சொன்னார் முருகதாஸ் சார். அவர் ஷாருக்கான் கிட்ட சொல்லும்போது முழு ஸ்கிரிப்டா அது உருவாகலை. என் கேரக்டரும் அது எப்படியிருக்கும் அப்படிங்கறதையும் மட்டும் அவர்கிட்ட சொன்னதாகச் சொன்னார். அமரனுக்கு கொடுத்த வரவேற்பை மத்ராஸிக்கும் மக்கள் கொடுப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு” இவ்வாறு அவர் கூறினார்