திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம்
இயக்குநர் விக்ரமன் தனது பதிவில், “துபாயில் நடந்த SIIMA விருது வழங்கும் விழாவில் 2024 ஆம் ஆண்டின் சிறந்த புதுமுகமாக என் மகன் விஜய் கனிஷ்கா தேர்வு செய்யப்பட்டு விருது பெற்ற போது..வாக்கு அளித்து support பண்ணிய அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்தார். மேலும், வணிக ரீதியில் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும், தனது மகனின் உழைப்புக்கும், திறமைக்கும் கிடைத்த இந்த விருது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று பெரிய விருதுகள்
இது விஜய் கனிஷ்காவுக்குக் கிடைத்த மூன்றாவது விருது என்றும், இதற்கு முன்னர் எம்.ஜி.ஆர் – சிவாஜி விருது மற்றும் மலேசியாவில் நடைபெற்ற Edison Film Award ஆகிய விருதுகளை அவர் பெற்றுள்ளதாகவும் விக்ரமன் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். இந்த விருதுகளுக்கு விஜய் கனிஷ்கா தகுதியானவர்தான் என்பதை ‘ஹிட் லிஸ்ட்’ படத்தைப் பார்த்தவர்களுக்குத் தெரியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.