‘மினி ஸ்டுடியோ’ எஸ். வினோத் குமார் தயாரிப்பில், முழுக்க, முழுக்க நகைச்சுவை மற்றும் இதயம் தொடும் ரொமான்ஸை இணைத்து உருவாக்கப்பட்ட ‘புதிய படம் ஆரோமலே’ .பழம்பெரும் நடிகர் தியாகுவின் மகனான சரங் தியாகு இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில்,கிஷன் தாஸ், ஹர்ஷத் கான், சிவாத்மிகா ராஜசேகர், மேகா ஆகாஷ், வி.டி.வி. கணேஷ், துலசி, சிபி ஜெயகுமார், நம்ரிதா எம்.வி, சந்தியா வின்ஃப்ரெட்உள்பட பலர் நடித்துள்ளனர்.இப்படத்தின் ஒளிப்பதிவை கவுதம் ராஜேந்திரன் கவனிக்க, சித்து குமார் இசையமைத்துள்ளார். இப்படம் குறித்து இயக்குனர் சரங் தியாகு கூறுகையில்,”கிஷன் தாஸ் – ஹர்ஷத் கான் கூட்டணி ரசிகர்களை நிச்சயம் ரசிக்க வைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. காதல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் சிவாத்மிகா ராஜசேகர் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்வார். வி.டி.வி. கணேஷ் தனது வழக்கமான நகைச்சுவையுடன் சேர்த்து இப்படத்தில் புதிய உணர்ச்சி பரிமாணத்தை வெளிப்படுத்தியுள்ளார். மூத்த நடிகை துளசி, கிஷனின் தாயாக முக்கியமான பாத்திரத்தை ஏற்று, படத்தின் உணர்ச்சி மையத்தை சிறப்பாக கொண்டு செல்கிறார். புதுமையான கதை சொல்லும் பாணி, ஈர்க்கும் திரைக்கதை, கண்ணுக்குப் பிடித்த காட்சியமைப்புடன் ‘ஆரோமலே’ இளைஞர்களும் குடும்ப பார்வையாளர்களும் ஒருசேர ரசிக்கும் படைப்பாக உருவாகி வருகிறது” என்கிறார்.விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் இன்ட்ரோ ஃபீல் க்ளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.