எஸ்.எம்.தமிழினி புரொடக்சன்ஸ் கே.சசிகுமார், சி.பி.பிலிம்ஸ் ஆர்.சின்னசாமி இணைந்து தயாரித்துள்ள புதிய படத்துக்கு ‘திரள்’ என பெயரிடப்பட்டுள்ளது.இதில்,மறைந்த நடிகர் மயில் சாமியின் மகன் யுவன் , ரவி பிரகாஷ், கிரி மூவரும் கதாநாயகர்களாக நடிக்க, அல்பியா ,மீராராஜ் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர் இவர்களுடன் சேரன்ராஜ், சாப்ளின் பாலு, நித்தின், தமிழினி, வெங்கடேஷ் ரவிச்சந்திரன்உள்பட பலர் நடித்துள்ளனர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பற்றிய 1000 ஆண்டுகள் கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் திரைக்கதையில் ரூ. 700 கோடி புராஜெக்ட் குறித்த ஒரு விஷயம் முக்கிய இடம் வகிக்கிறது.மனோஜ் கார்த்தி இயக்கத்தில்,கிரைம், த்ரில்லர், ஆக்சன் என விறுவிறுப்பான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி திரைக்கு வருகிறது ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனீஷ் வெளியிடுகிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை அபி ஆத்விக் கவனிக்க,ஏ.இ.பிரஷாந்த் இசையமைத்துள்ளார்