இப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இரு இளம் கலைஞர்கள் இணைந்து இயக்கியிருக்கின்றனர். இதன் இணை இயக்குநராக கலைவளரி சக இரமணா இருப்பதோடு இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்களாக ஓசை பிலிம்ஸ் நிறுவனர் கலைவளரி சக இரமணா மற்றும் சுகந்தினி ரமணதாஸ் தயாரிக்கின்றனர்.இப்படத்தின் தொடக்க விழாஇலங்கை – யாழ்ப்பாணத்தில் கடந்த மார்ச் மாதம் பூஜையுடன் தொடங்கி , 45 நாட்களுக்கு மேலாக இரவு பகல் பாராது படப்பிடிப்புகள் நடந்து ஏப்ரல் மாதம் நிறைவுபெற்றிருந்தது.
இந்நிலையில் இப்படம் குறித்து தயாரிப்பு தரப்பு கூறுகையில்,” எமது ஈழத்தமிழ் சினிமாவுக்கு ஒரு உலகறிந்த இசையமைப்பாளரை ஒழுங்கு செய்வதே சிறந்ததாக இருக்கும் எனும் எண்ணம் படத்தயாரிப்புக் காலங்களிலேயே கலந்துரையாடப்பட்டதால் இசைஞானி இளையராஜாவே இப்படத்திற்கு தகுந்த இசையை வழங்குதல் சிறப்பாக இருக்கும் என்பது தீர்மானிக்கப்பட்டு அவரை அணுகுவது என்றிருந்தோம்.
அவ்வாறே அவரை கடந்த மாதம் அணுகிய வேளை கதையைக் கேட்டதும் எந்தவித மறுப்புமின்றி ஒத்துக்கொண்டார். அதேவேளை படத்தையும் பார்த்தார். இசையமைப்பு வேலைகள் இரண்டு நாட்களிலேயே ஆரம்பமாகி தற்பொழுது இறுதி நிலைக்கு வந்துள்ளது. யாழ்ப்பாணத்தின் ஒரு காதல் கதைக்களத்திற்கு இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைப்பதும் ஈழத்திரைப்படத்திற்கு இசையமைப்பதுவும் இதுவே வரலாற்றில் முதற்தடவையாகும்”. என்கிறது