தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களை தேர்வு செய்து தங்களுடைய பொதுக்குழு கூட்டத்தில் வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்ட விருதுகளை ஒவொரு வருடமும் சங்க நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு அச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வருகிற செப்டம்பர் 21ஆம் தேதி காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது.அந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் 90 வது பிறந்த நாளைக் கொண்டாடிய தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையான எம்.என். ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்க நடிகர் சங்க நிர்வாகிகள் முடிவு செய்தனர். இதையடுத்து
தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி,துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் நடிகை எம் என் ராஜத்தை நேரில் சந்தித்து முறையாக அழைப்பு விடுத்துள்ளனர் .
தமிழ் திரையுலகில் கடந்த 1950 முதல் 1960 ஆம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்த எம்.என்.ராஜம் .ரத்தக்கண்ணீர், பெண்ணின் பெருமை, புதையல், தங்கப்பதுமை, நாடோடி மன்னன், பாசமலர், தாலி பாக்கியம், அலிபாபாவும் 40 திருடர்களும், அரங்கேற்றம் உள்ளிட்ட 200 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது