“ரெட்ட தல” படத்தின் “கண்ணம்மா” பாடல் வெளியானது!

“சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜய் -யின் ‘ரெட்ட தல’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் 2 வேடங்களில் நடிக்கும் அருண் விஜயின் ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். தான்யா ரவிச்சந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.பிடிஜி யூனிவர்சல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம். சி.எஸ் இசையமைத்துள்ளார் சமீபத்தில் இப்படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது.தனுஷ் பாடியுள்ள இந்த கண்ணம்மா பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.