‘பாத்வே புரொடக்ஷன்ஸ்’ அருண் ரங்கராஜூலு தயாரிப்பில், ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கவுதம் மேனன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம்,’கார்மேனி செல்வம்’ .இதில்,சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமிபிரியா சந்திரமௌலியும், கவுதம் மேனன் ஜோடியாக அபிநயாவும் நடித்துள்ளனர்.இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. .நாயகன் செல்வத்தின் மனதை பிரதிபலிக்கும் வகையில், வாழ்க்கையின் சாரத்தையும் அவரது ஆசைகளையும் உள்ளடக்கிய ஒரு நெகிழ்ச்சியான பாடலாகும். செல்வத்தின் பார்வையில் இருந்து எழுதப்பட்டுள்ள பாடல் வரிகள், ஒரு டாக்ஸி ஓட்டுநராக அவரது நேர்மையான போராட்டங்கள், அவரது மனைவி சாந்தி மற்றும் மகன் பாலுவுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதற்கான அவரது கனவுகள் மற்றும் “நேர்மை ‘இ.எம்.ஐ’ களுக்கு பணம் செலுத்தாது” என்ற அனுபவம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்துகிறது. அவரது வாழ்க்கையின் அன்றாட சூழ்நிலையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. தனது கொள்கைகளைக் கைவிட்டு, செல்வத்தை மாற்றுப் பாதையில் செல்லத் தூண்டும் தார்மீக சங்கடத்தை இது படம்பிடிக்கிறது. ‘எப்போ வருவாயோ’ என்ற ஏக்கம் மிக்க வரி, குடும்பத்திற்காக தனது கணவர் எல்லாவற்றையும் விட்டுக்கொடுப்பதைப் பார்க்கும் ஒவ்வொரு மனைவியின் சொல்லப்படாத வலியைப் படம் பிடிக்கிறது.வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாகவுள்ள இப்படம் குறித்து அதன் இயக்குனர் ராம் சக்ரி கூறுகையில்,” “நேர்மையான, உண்மையான மற்றும் உலகளவில் தொடர்புபடுத்தக்கூடிய ஒரு கதையை ‘கார்மேனி செல்வம்’ படத்தின் மூலமாக சொல்வதே எங்கள் நோக்கம் ஆகும். பணத்தேவை என்பது எல்லோருக்கும் இருக்கிறது. நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற சூழ் நிலைக்கு தள்ளப்படும் இப்படத்தின் நாயகன் ,பணத்தைத் தேடி அதற்கான பயணத்தை மேற்கொள்ளும் போது அவரது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் அந்த மாற்றங்கள் அவருக்கு என்ன கற்றுக்கொடுக்கிறது என்பது தான் இப்படத்தின் பரபரப்பான திரைக்கதையாக்கப்பட்டுள்ளது என்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை யுவராஜ் தக்ஷன் மேற்கொள்ள, இசையை மியூசிக் கிளவுட் ஸ்டூடியோ அன்ட் டெக்னாலஜி எனும் நிறுவனம் அமைத்துள்ளது.