சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் மட்டுமே ‘பாகுபலி 2’ வெளியாகும் என்று தெரிவித்துள்ளன. இதனால் கர்நாடகாவில் ‘பாகுபலி 2’ படத்தின் உரிமையை வாங்கி வெளியிட யாரும் முன்வராததால், ‘பாகுபலி 2’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா நேரடியாகவே வெளியிட முடிவு செய்துள்ளது.இதையடுத்து,
ஏப்ரல் 28ம் தேதி பந்த் நடத்த கன்னட அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இதனால் அங்கு பெரும் சர்ச்சை உண்டாகியுள்ளது. இது குறித்து ராஜமௌலி தனது ட்விட்டர் வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது,
” பல வருடங்களுக்கு முன்பு சத்யராஜ் சார் தனிப்பட்ட முறையில் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து பல படங்கள் வெளியாகியுள்ளன. ‘பாகுபலி’ வெளியாகும் போது இப்பிரச்சினையில்லை.
இப்படத்தில் அவர் ஒரு நடிகர் மட்டுமே. தயாரிப்பாளரோ, இயக்குநரோ அல்ல. உங்களுடைய எதிர்ப்பை நான் சத்யராஜ் அவர்களிடம் விளக்கிவிட்டேன். இதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியவில்லை. சத்யராஜ் மீதுள்ள கோபத்தை ‘பாகுபலி 2’ திரைப்படத்தின் மீது காட்டுவது சரியல்ல. ‘பாகுபலி’ படத்துக்கு கிடைத்த அதே ஒத்துழைப்பை, ‘பாகுபலி 2’ படத்துக்கும் தர வேண்டும் ” என்று பேசியுள்ளார் ராஜமெளலி.