தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும் பாடகராகவும், இயக்குநராகவும் வளம் வந்த கங்கை அமரன் தனது 77 வது வயதில் தற்போது லெனின் பாண்டியன். படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.அறிமுக இயக்குநர் டிடி பாலசந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இப்படத்தை தயாரித்து வரும் சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் கங்கை அமரனின் கதாபாத்திரம் குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. . கங்கை அமரன் இதற்கு முன்னர்தான் இயக்கிய படங்களின் ஒரு நிமிட அறிமுக காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளார்.
இந்நிலையில் கங்கை அமரனின் ஒரு நிமிட வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்ததுள்ள சரத்குமார் , ” இயக்குநராக பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர், பாடலாசிரியராகவும் இசையமைப்பாளராகவும் ஜொலித்தவர் கங்கை அமரன். அவர் தனது திரை வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை நடிகராக தொடங்குகிறார். அவருக்கும் லெனின் பாண்டியன் படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்” என்றும் பதிவிட்டுள்ளார்.