கடந்த செப்டம்பர் மாதம் 27 ம் தேதி நடிகர் விஜய் கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.நாடு முழுவதும் இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் அஜித் குமார் ஆங்கில ஊடகத்துக்கு பேட்டி அளித்தார்.அந்நிகழ்வில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அந்த கேள்விக்கு விஜய் பதிலளிக்கையில் ,‛‛அந்த சம்பவத்துக்குத் தனிநபர் மட்டுமே காரணமில்லை. நாம் அனைவருமே காரணம்தான். ஊடகங்களுக்கும் பங்கு இருக்கிறது. ஒரு சமூகமாகக் கூட்டத்தைக் கூட்டிக் காட்டுவதில் நாம் ஈடுபாடு காட்டுகிறோம். இது உடனடியாக முடிவுக்கு வர வேண்டும்.கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கவும் அதிக கூட்டம் வருகிறது. ஆனால் அங்கு இப்படி எதுவும் நடப்பதில்லை. சினிமா பிரபலங்களுக்கு மட்டும் இப்படி நடக்கிறது. அதனால் ஒட்டுமொத்த திரைத்துறையும் மோசமாகச் சித்தரிக்கப்படுகிறது. எங்களுக்கு அதில் விருப்பமில்லை. ரசிகர்களின் அன்பு எங்களுக்குத் தேவைதான். அதற்காகக் கடுமையாக உழைக்கிறோம். ஆனால் அந்த அன்பை வெளிப்படுத்த உயிரைப் பணயம் வைக்க வேண்டாம். முதல் நாள் முதல் காட்சி கலாச்சாரத்தை ஊடகங்கள் ஆதரிக்கக் கூடாது” என்றும் கூறியிருந்தார்
நடிகர் விஜயின் ஆதரவாளர்கள்,அஜித்குமார் தங்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதாகவும், எதிர்தரப்பினரோ, நடிகர் அஜித் குமார் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளதாகவும் கூறி வருகின்றனர். இது இன்று வரை சமூக வலைதளங்களில் விவாதமாகி வருகிறது.இந்நிலையில் இந்த விவாதத்துக்கு மத்தியில் நடிகர் அஜித் குமார் விளக்கம் அளித்து கூறியுள்ளதாவது, ”ஆங்கில ஊடகத்திற்கு நான் கொடுத்த பேட்டி, இளைஞர்களுக்கு நல்ல செய்தியைக் கொண்டு சேர்ப்பதற்கு பதிலாக ஒருசிலரால் அவர்களுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது எனக்குத் தெரியும்.இங்கே எதையெடுத்தாலும் பரபரப்பாகத்தான் முயல்வார்கள். ஆனால் நான் நேர்மறையான எண்ணங்களுடன் எனக்குப் பிடித்த பாதையில் பயணிக்கவே விரும்புகிறேன். ஒரு காலத்தில் சினிமா பத்திரிக்கையாளர், விளையாட்டு பத்திரிக்கையாளர், அரசியல் பத்திரிக்கையாளர் என்று இருந்தனர். ஆனால் இன்று அரசியல் பத்திரிக்கையாளர்களைவிட ஒருசில சினிமா பத்திரிக்கையாளர்ளே மிகவும் அரசியல் மயமாகியுள்ளனர். என்னுடைய நல்ல எண்ணங்கள் சில ஊடகங்களால் சரியாகக் கொண்டு சேர்க்கப்படவில்லை.மாறாக, அவர்கள் இதை அஜித்துக்கும் விஜய்க்கும் இடையிலான மோதல், அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையிலான போர் என்பதுபோல ஆகிவிட்டனர். நாம் நச்சுக் கலந்த ஒரு சமுதாயமாக மாறிவிட்டோம். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் எனுடைய இந்த ஆங்கில ஊடகத்திற்கான பேட்டி 15-20 ஆண்டுகள் கழித்து மிகப்பெரிய பேசுப்பொருளாக மாறிருக்கும். உங்களையும் உங்கள் குடும்பங்களையும் முதலில் பாருங்கள். பார்ப்பதற்கு தகுதியானது என நினைத்தால் என் படத்தை பாருங்கள் என்று என் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பல ஆண்டுகளாக சொல்லிவருகிறேன். படத்தை பாருங்கள் என்று மக்களை வற்புறுத்த செய்யமாட்டேன். ஓட்டும் கேட்டு வரமாட்டேன்.படங்களில் நடிப்பது மற்றும் கார் பந்தயங்களில் ஈடுபடுவது என எனக்கு பிடித்தவற்றில் கவனம் செலுத்துவேன். எப்போதெல்லாம் ரேஸ் காரில் அமர்கிறேனோ, அப்போதெல்லாம் உயிர் போவதற்கு ஒரு நொடி போதும் என்பது எனக்கு நன்றாக தெரியும். அதனால் எனக்கு எந்தொரு திட்டமும் உள்ளோக்கும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். வாழ்க்கை மிகவும் எளிதில் உடையக்கூடியது. என்னால் முடிந்தவற்றை வைத்து, முடிந்த வரை நன்றாக வாழ விரும்புகிறேன்.கரூரில் நடந்தது துரதிஷ்டவசமானது. அது நீண்ட நாள்களாக நடக்கக் காத்திருந்த ஒரு விபத்து. இதற்கு முன் ஆந்திர சினிமா திரையரங்கில் நடந்துள்ளது. பெங்களூரு கிரிக்கெட் மைதானம் முன்பில் நடந்தது. பல நாடுகளில் நடந்திருக்கிறது. நான் ஏற்கெனவே சொன்னது போல பொதுவெளியில் எப்படி நடக்க வேண்டும் என்ற விதிமுறைகள், நான் உட்பட அனைவருக்கும் பொருந்தும். எனது இந்த கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்படாது என்று நம்புகிறேன்.
ஒரு சில ஊடகங்கள், ரசிகர்கள் மீது பழியை சுமத்த முயல்கின்றன. ஆனால் ஒரு சம்பவத்தை கூற விரும்புகிறேன். எனது தந்தை இறந்த போது, அவரது பூத உடலை எடுத்துச் சென்றபோது ஒரு சில ஊடகங்கள் எங்கள் பின்னால் கேமிராக்களுடன் பின் தொடர்ந்தனர். உயிரில்லாத அந்த உடலின் விடியோ காட்சியை எடுக்க முயற்சித்தனர். இதனால் அங்கிருந்த ஒவ்வொருவரும் தங்களுடைய உயிரைப் பணயம் வைக்க நேரிட்டது. ஒரு சில ஊடகங்களே இப்படி இருக்க, ரசிகர்களையோ, தொண்டர்களையோ குறைச் சொல்ல என்ன உரிமை இருக்கிறது? ஏற்கெனவே சொன்னது போன்று நானும் குற்றத்திற்கு பொறுப்பானவன்தான். என்னிடமும் தவறுகள் உள்ளன. நாம் அனைவரும் குடிமக்களின் கடமையை உணர்ந்து அதனைப் பின்பற்ற வேண்டும். வாக்களிப்பதை நான் ஒரு குடிமகனின் கடமையாக பார்க்கிறேன்.
எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கும் சிலர், அமைதியாக இருப்பது நல்லது. நான் விஜய்க்கு நல்லதை மட்டுமே நினைத்திருக்கிறேன், வாழ்த்தியிருக்கிறேன். எல்லோரும் அவர்கள் குடும்பங்களுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ நான் வாழ்த்துகிறேன்.
இதற்கிடையில் என்னுடைய பூர்வீகம் அடிக்கடி கேள்விக்கூளாகப்படுகிறது. என்னை பிடிக்காதவர்கள் எப்பொழுதுமே நான் வேற்றுமொழிக்காரன் என்று கூறிவருகின்றனர். ஒரு நாள் வரும், அன்று இதே நபர்கள் என்னை உரத்த குரலில் தமிழன் என்று அழைப்பார்கள். கார் ரேஸில் சாதித்து இந்த மாநிலத்திற்கும், இந்த நாட்டிற்கும் பெருமை சேர்ப்பேன் என்று நம்புகிறேன். இதற்காக என்னுடைய உடலையும் முழு ஆன்மாவையும் அர்ப்பணிக்கிறேன். என் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் இந்த பணியில் என் உயிரே போனாலும் பரவாயில்லை. உங்களின் அன்பு, ஆதரவு மற்றும் வாழ்த்துகளுக்கும் மிக நன்றி.
தமிழகமே விழித்துக்கொள். இந்தியாவே விழித்துக்கொள்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.