சசிகுமார்-ராஜுமுருகன்-கூட்டணியில் உருவான ‘மை லார்ட்’ !
By
admin on November 22, 2025
‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தை தொடர்ந்து நடிகர் சசிகுமார், “ஜோக்கர், குக்கூ, ஜப்பான்” ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘மை லார்ட்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது.இந்த படத்தில் சைத்ரா ஆச்சர் கதாநாயகியாக நடிக்கிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடந்து முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தின் டீசர், டிரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என தெரிகிறது.இந்நிலையில்,ஷான் ரோல்டன் இசையமைத்து வரும் இப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. ‘எச காத்தா’ என தொடங்கும் இப்பாடலை சின்மயி, சத்யபிரகாஷ் இணைந்து பாடியுள்ளனர். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சசிகுமாரின் ‘மை லார்ட்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது