தமிழ்த்திரையுலகில் முரட்டு சிங்கிளாக வலம் வந்த நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் ஒரு வழியாக , கடந்த வருடம் இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்தத் தம்பதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இந்து பிரேம்ஜியின் குழந்தைக்கு அவரது தோழி ஒருவர் அழகான உடைகளை பரிசளித்துள்ளார்.
அந்த உடைகளின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, ‘இந்த மென்மையான அவுட்ஃபிட் அருமையாக இருக்கிறது. நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் குழந்தைக்கு வந்த கிப்டை யெல்லாம் ஃபோட்டோவா போடுறீங்க குழந்தை முகத்தை எங்களுக்கு எப்போது காட்டுவீர்கள்” என பதிவிட்டு வருகின்றனர்