சிம்பு, வெற்றிமாறன்-கலைப்புலி எஸ்.தாணு கூட்டணியில் உருவாகும் புதிய படம், ‘அரசன்’ . கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ள நிலையில்,; நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். இது குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் எஸ்.தாணு தனது சமூக வலைதளத்தில்,” “மனிதம் இணைகிறது மகத்துவம் தெரிகிறது” என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார். இப்படம் வடசென்னை படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகும் என்று வெளியான தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள இயக்குனர் வெற்றிமாறன், வடசென்னை யுனிவர்ஸில் நடக்கும் இன்னொரு கதையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்