மலேசியாவில் இசை வெளியீட்டு விழாவை முடித்துக்கொண்டு ஜனநாயகன் படக்குழு நேற்று சென்னை திரும்பியது. நடிகர் விஜய் வருகையை அறிந்த ரசிகர்களும், தவெக தொண்டர்களும் விமான நிலையத்தில் குவிந்தனர். அங்கு கூடிய கூட்டத்தை பாதுகாப்பு படையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. ரசிகர்களின் தள்ளு முள்ளு காரணமாக விஜய் தடுமாறி கீழே விழுந்தார்.எனினும் விஜய்யை பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பினர் .ஆனால் விமான நிலையத்தில் புறப்பட்ட சில நிமிடங்களில் விஜய்யின் கார் விபத்தில் சிக்கியது. அதாவது பின்பக்கமாக வந்த கார், பின்னால் வந்த விஜய்யின் காரை கவனிக்காததால் இடித்தது. இதில் விஜய்யின் காரின் இண்டிகேட்டர் உடைந்தது. இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை இச்சம்பவம் நடந்து முடிந்த சில மணி நிமிடங்களில் நடிகை மமிதா பைஜூ அங்கு வந்தார். அவரைக் காண ரசிகர்களும், புகைப்பட கலைஞர்களும் விரைந்ததால், கூட்டத்தில் சிக்கினால் அதோகதி தான் என பயந்துபோன அவர் அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக வேறு பாதை வழியாக அவசர அவசரமாக வெளியேறிரசிகர்களின் பிடியில் இருந்து தப்பினார். கடந்த வாரம் நடிகை நிதி அகர்வால்,சமந்தா ஆகிய இருவரும் ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கி அவதிப்பட்ட சம்பவம் நடந்துள்ள நிலையில்,தற்போது நடிகை மமிதா பைஜூ ரசிகர்களின் பிடியிலிருந்து தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. ரசிகர்கள் பொது வெளியில் அநாகரீகமாக நடந்துகொள்வதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்