பெங்களூரில் வசித்து வரும் கன்னட சின்னத்திரை நடிகையான நந்தினி, அங்கு ஜீவ ஹூவாகிடே, சங்கர்ஷா, மதுமகளு மற்றும் நீனாதே நா உள்ளிட்ட பல பிரபலமான கன்னட தொலைக்காட்சித் தொடர்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார்.மேலும் , கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கௌரி தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் கனகா மற்றும் துர்கா என சவாலான இரட்டை வேடத்தில் நடித்து வந்தார்.பெரும் வரவேற்பை பெற்ற அந்த தொடர் அவருக்கு பெரிய பாராட்டை பெற்றுத் தந்தது.இந்நிலையில்,நேற்று இரவு பெங்களுரில் தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நந்தினி தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவழும் வெளியாகவில்லை. இதுகுறித்து போலீசார் அவரது குடும்பத்தினர் உடன் நடித்த நடிகர் நடிகைகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகை நந்தினியின் திடீர் மறைவு கன்னட மற்றும் தமிழ் தொலைக்காட்சி நடிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கௌரி தொடரின் படப்பிடிப்பு தொடக்கத்தில், பெங்களூருவிலேயே நடந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த தொடரின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்துள்ளது.
இதில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நந்தினி விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் காட்சியில் நடித்து விட்டுத்தான் நந்தினி பெங்களுருக்கு சென்றதாக உடன் நடித்த நடிகர்கள் தெரிவித்துள்ள தாக கூறப்படுகிறது.