எல்லோரும் ஓரினம். மாநிலங்கள் எல்லை பிரிந்து நின்றாலும் இந்திய உணர்வு குறையாமல் நிறையாக வாழ்வோம் என்பதுதான் சட்டமேதைகள் நமக்கு தந்திருக்கும் பாதுகாப்பு.
ஆனால் சட்ட மேதைகளின் வாக்குறுதிகள் சட்டப்புத்தகத்தில் எழுத்தில் மட்டுமே இனி இருக்கும் என்கிற ஆபத்து கழுத்து வரை வந்து விட்டது. சட்டங்களே சனாதன கோட்டுகள்அணிந்து நீதியின் வாசலில் நிற்கிறபோது சாமான்யன் என்ன செய்வான்?நீதி கிடைக்குமா ? நேர்மை நிலைக்குமா ?
எது என்னவானால் என்ன போர்க்குணம் குன்றிவிடாமல் வாழும் வரை மனிதம் மரணிப்பதில்லை .நம்பிக்கையும் திராவிட உணர்வு மங்காமல் இருக்கும் வரை தமிழனை எந்த தீய சக்தியும் தீண்ட முடியாது.
இந்த நம்பிக்கையுடன் ஆங்கிலப் புத்தாண்டினை வரவேற்கிறோம்,