நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக ‘ஜனநாயகன்’.உருவாகி இருக்கிறது. ஹெச். வினோத் இயக்கத்தில், ‘பகவந்த் கேசரி’ தெலுங்கு படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளதாக கூறப்படும் இப்படத்தின் முன்னோட்டத்தில், விஜய் பேசிய அரசியல் வசனங்கள் கவனம் பெற்றன.இந்நிலையில், கடந்த மாதம் 19ஆம் தேதி தணிக்கைச் சான்றுக்காக ‘ஜனநாயகன்’ திரைப்படம் அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த பின்னர், தணிக்கைக் குழு உறுப்பினர்கள் கூறிய ஆட்சேபகரமான காட்சிகளில் சில மாற்றங்களை செய்து தயாரிப்பு நிறுவனம் மீண்டும் அனுப்பியதாக கூறப்படும் நிலையில், சென்சார் குழுவினரிடமிருந்து இதுவரை எவ்வித ரெஸ்பான்ஸும் இல்லை என்கிறார்கள் .ஆனால் வெளியீட்டுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கொதிப்படைந்த தயாரிப்பு நிறுவனம் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அதில், “ஜனநாயகன் படம் ரிலீஸாக இன்னும் மூன்று நாட்களே இருக்கின்றன. எனினும் இன்னும் தணிக்கை குழு சான்றிதழ் வழங்கவில்லை. படத்தை தணிக்கை குழுவினர் பார்ப்பதற்காக கடந்த மாதமே அனுப்பினோம். டிசம்பர் 19ஆம் தேதி படத்தை பார்த்த அவர்கள் சொன்ன மாற்றத்தை செய்து மறு தணிக்கைக்கும் அனுப்பப்பட்டது. ஆனாலும் இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தது.இம்மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரித்தது நீதிமன்றம். வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்திருக்கிறது.
இந்நிலையில் இப் படத்தின் ஒரு டிக்கெட் ரூ.1000 வரை விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான ரசிகர் மன்ற நிர்வாகியின் ஆடியோ வெளியாகி கோவில்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் விஜயின் ‘ஜன நாயகன்’ படத்திற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப் படுவதாகவும்,உடனடியாக இது குறித்து அரசு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.