கமல்ஹாசன் கோர்ட்டில் ‘திடீர்’ வழக்கு ! நாளை விசாரணைக்கு வருகிறது!!

நடிகரும் மக்கள் நீதிமய்யகக்கட்சியின் தலைவருமான  கமல்ஹாசன், தனது பெயர், புகைப்படம், குரல், மற்றும் “உலகநாயகன்” என்ற பட்டத்தை வணிக ரீதியாகப் பயன்படுத்தத் தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இவ்வழக்கில், சென்னையை சேர்ந்த ‘நீயே விடை’ நிறுவனம், கமல்ஹாசனின் ஒப்புதலின்றி அவரது புகைப்படம், திரைப்பட வசனங்கள் அச்சிடப்பட்ட டி-சர்ட்டுகளை விற்பனை செய்கிறது. இத்தகைய வணிக நடவடிக்கைகள் தன்னை ஒரு பண்டமாக மாற்றுவதாகவும், இதை அனுமதிக்க முடியாது எனவும்
கடின உழைப்பால் ஈட்டிய புகழையும், தனி அடையாளத்தையும் பாதுகாக்கவே அவர் இந்தச் சட்ட நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும், தன் அனுமதியின்றி புகைப்படம், பெயர், குரல் அல்லது “உலகநாயகன்” பட்டத்தை வணிகப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது என மனுவில் வலியுறுத்தியுள்ளார். தன் புகழையும் அடையாளத்தையும் சிலர் தவறாகப் பயன்படுத்துவது, தனது நற்பெயருக்கும் ரசிகர்களின் நம்பிக்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.