சென்னை தி. நகர் வண்டிக்காரன் சாலையில் கடந்த 11-ந்தேதி பத்மா என்ற தூய்மை பணியாளர், பணியில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது குப்பையோடு கிடந்த 45 சவரன் தங்க நகைகளை அடங்கிய பையை கண்டெடுத்தார்.இதையடுத்து உடனடியாக நகைகளை பாண்டிபஜார் காவல்நிலையில் ஒப்படைத்தார். ஏழ்மையான நிலையில் இருந்த பத்மாவின் இந்த நேர்மையான செயல் பலராலும் பாராட்டப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்மாவை நேரில் அழைத்து பாராட்டி அவருக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், இன்று காலை பத்மாவை நேரில் அழைத்து பாராட்டியதோடு, அவருக்கு பொன்னாடை போர்த்தி தங்க செயினையும் பரிசாக அளித்தார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.