நீண்ட வருடங்களுக்கு பிறகு சூப்பர்ஸ் டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கின்றனர்..இப்படத்தை முதலில் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக தகவல்கள் வெளியான நிலையில், சுந்தர்.சி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் திடீரென அப்படத்திலிருந்து விலகுவதாக சுந்தர்.சி அறிவித்தார். .இதையடுத்து ரஜினி,கமல் இணையும் புதிய படத்தை இயக்குவது யார்? என்பது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து இப்படத்தை ஜெயிலர் 2. படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. நெல்சன் சொன்ன கதை ரஜினி,கமல் இருவருக்குமே பிடித்து இருந்ததால் தயாரிப்பு நிறுவனமும் இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கியுள்ளது. இந்நிலையில்,நெல்சன் இயக்கத்தில் ரஜினியும், கமலும் இணைந்து நடிக்கவுள்ள புதிய படம் தொடர்பான புரமோ படப்பிடிப்புஇன்று காலை சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் தொடங்கியுள்ளது .மேலும் இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ராஜுவ் மேனன் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது இதில் நெல்சனுடன் இசையமைப்பாளர் அனிருத்தும் கலந்து கொண்டுள்ளார் ..மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அவரது 173-வது படத்துக்கு பின்பே தொடங்கும் என்கிறார்கள் சிபி சக்கரவர்த்தி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் முதல் வாரம் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.